சித்திரம் பேசுதடி – நதியா


சோலை நகரத்து பைங்கிளியே !
என்ன நினைத்து உறங்கினாய்
விடிந்தால் விடுமுறை...
விளையாடலாம் என்றா !
மாமா, அண்ணா என்னும்
அன்போடு அழைத்தாயே !
ஒரு போதும் நினைத்தாயா ! அவர்கள்
உன் பிஞ்சு உடலை சிதைப்பார்கள் என்று ! .
நிம்மதியாக துயில் கொள் !
நீ கொஞ்சி விளையாடிய பொம்மைகளோடும்
உன் புத்தகப் பையோடும் !...
கவலை கொள்ளாதே ! இனி வரும் ஒரு சில நாட்களுக்கு
எங்கள் கை பேசியிலும்..
அண்டை வீட்டு சுவரிலும்..
உன் சித்திரம் மட்டும் பேசுமடி.. அதுவும்
உன் அடுத்த சகோதரி சிதையும் வரை...
எங்கள் மீது கோபம் கொள்ளாதே !
ஏனெனில் எங்களை பிடித்திருப்பது மறதி எனும்
மருந்தில்லா நோயே!...
இப்படிக்கு உன் சகோதரி,
- நதியா



