top of page

தற்கொலை தீர்வல்ல - ரா.சுஜானந்த்  பரத்

Writer: HARI PRIYAA M
HARI PRIYAA M
Aug 21
2 min read

Updated: Aug 27



இன்று நம் அன்றாட வாழ்வியலில் தற்கொலை செய்திகளை அதிக அளவில் கேட்கிறோம். இதில் இளைஞர்களின் இறப்பு தான் அதிகம் என்று புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன.


இது முதலில் மாணவர்களிடத்தே தொடங்கி பெரியவர் வரை நீடிக்கிறது.இதற்கு முக்கிய காரணம் தனிமைப்படுதலே. இன்று,நம் நடைமுறை வாழ்வில் உறவினர்களிடமிருந்து பிரிந்து சென்று திறன் பேசிக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறார்கள். மானிடத்தால் ஏற்படுகின்ற மன உளைச்சலை விட வலைதளங்களால் ஏற்படுகின்றன மன கரைசல்களே அதிகம். இன்றைய இளைஞர்கள் வெளி உலகை மறந்துவிட்டு பட வரி (இன்ஸ்டாகிராம்) செயலிக்கு அடிமையாகி விட்டார்கள். அந்த செயலிக்குள் ஒரு பூலோகம் இருப்பது போல் ஒரு கண்ணோட்டம். 


அதிலும் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக வளரிளம் பருவத்தில் இருப்போர் மன உளைச்சலுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். இதற்கு காரணம் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்ற திறனை அறியாதிருத்தலே ஆகும். நான் பள்ளி மாணவர்களிடத்தே ஊக்குவிப்பு உரை நிகழ்த்துவதற்காக செல்வதுண்டு. என்னை ஒரு அரசு பள்ளியில் ஊக்கவிப்பு உரை நிகழ்த்துவதற்காக அழைப்பு விடுத்திருந்தார்கள். மாணவர்கள் வளர் இளம் பருவத்தினர் அப்போது அவர்களிடம் நான் அண்மையில் படித்த எலான் மாஸ்கின் வாழ்வியல் முறையை எடுத்துரைத்தேன். எலான் மாஸ்க் இளம் வயதில் ஒரு பெண்ணிடம் இளங்கலையில் (ஆன்லைன்) பேசிக்கொண்டிருந்தார். அந்த பெண்ணும் இவரை நேசித்து பழகினால். ஆனால் காலப்போக்கில் அந்தப் பெண் இவரை தளத்தில் முடக்கி(பிளாக்) விட்டால். இவர் மனம் தளர்ந்து,தற்கொலை எண்ணம் இவருக்குள் உதித்தது. தனது இறுதி நேரத்தில் சில சிந்தனைகள் சிறகடித்தது.


திடீரென “நான் ஏன் இறக்க வேண்டும்?” என ஒரு  உத்வேகம் பிறந்தது. கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.அதில் சேர்ந்த பணம் மூலம் அந்த பெண் எந்த நிறுவனத்தில் இவரை முடக்கினாலோ, அதே நிறுவனத்தை விலைக்கு வாங்கி தன் காதலியின் நினைவாக அந்த நிறுவனத்தின் பெயருக்கு பின் X என்று பதிவிட்டார். அந்த நிறுவனம் பெயர் ட்விட்டர் X. இந்த வரலாறு இன்றளவில் பல பேருக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொண்டு, வீர நடை போடுகிறது. பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் இதன் பின்னர் மாணவர்கள் கட்டாயம்  மாற்றம் பெறுவர் என்று கூறினார். யாகாவாராயினும் ஒரு நாள் கண்டிப்பாக “ஏன் வாழ வேண்டும்?” என்று எண்ணம் உதிக்கும். அப்போது நினைவில் கொள்க:

 

“வீட்டுக்கு வீடு வாயில் படி; எல்லோருக்கும் கஷ்டம் உண்டு:


அதற்கான வழியை கண்டெடுத்து உறுதி கொள்க.அச்சம் என்பது உணர்வு. மேகங்கள் உடைந்தால் மழையாகிறது. விளைந்த நிலம் பயிரை தழுவுகிறது. கலங்கிய நீர் ஒருநாள் தெளியும். அதுபோல குழம்பிய மனமும் ஒரு நாள் தெளிவடையும். தங்கத்தை உருக்கினால் தான் அணிகலன். கஷ்டங்கள் தான் நம்மை கட்டமைக்கின்றன. தற்கொலைகள் அல்ல. வலுவான மனங்களே வரலாறு படைக்கின்றன.


தற்கொலை தீர்வல்ல. தன்னம்பிக்கையோடு செயல்படு,

 

நாளை நமதே; உதயம் இனிதே!!!

 

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!! உச்சமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்!!!    ---மகாகவி பாரதியார்

 

“தன்னம்பிக்கை கொள்பவருக்கு தரணி வசப்படும்”   

                                                                - ரா.சுஜானந்த்  பரத்

 

 

இதற்கான தீர்வு:


ஒரு விநாடிச் சிந்தனை பல விந்தைகளை எழுப்புவதோடு, சிறந்த வாழ்வை தருகிறது. 

 

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கட்டும்”

                                                                             -அப்துல்கலாம்

 

நன்றிகள் பல.

 


Erode College Of Law is committed to delivering quality legal education, practical learning, and professional excellence to shape the future of successful legal professionals.

Quick Links

Home

About us

Courses

Blogs

Events

Contact Us

Courses

B.A.LL.B

LL.B

Contact Details

No.17, Erode Road, (PCA College Campus), Perundurai, Erode, Tamilnadu - 638052

+91 88047 66666

+91 88382 88458

Copyright All Right Reserved 2026, Erode College of Law. Design by TheWebzone

  • facebook
  • instagram
  • twitter (1)
  • linkedin
  • youtube
bottom of page
Admission Enquiry