வியாபாரி - Monapriyan (1st LLB)
- karthick M
- May 26
- 1 min read

உச்சி வெயில் சாலைஓரம் தள்ளு வண்டியில் அடுக்குவரிசை பழங்கள் பாதம் வெடிக்கும்படி நிறைகோலுடன் நின்று இருந்தார்...!!! வாதம் வெடிக்கும் படி வேடிக்கை பார்த்தவன் வெட்டி பேச்சோடு வந்தான் பாவம் அவர்கள் சுட்டெரிக்கும் வெயில் கூட இவர்களை சுடுவதில்லை ஆனால் கேலி பேச்சுக்கள் இவர்களை சுடுகின்றது
ஒவ்வொரு பழத்தையும் தொட்டு உணர்ந்து அழுத்துகையில் வலி பழங்களுக்கு அல்ல இவர்களின் மனங்களுக்கு தான் கடமை இல்லாமல் பணம் இல்லாமல் பழங்களை வாங்கி சென்று கொண்டிருப்பவர்களே.. கடனை கொடுக்கும் இவர்களே இறுதியில் கடன்காரர்கள் ஆகிவிடுகிறார்கள் ...!!! வல்லவனாய் நல்லவனாய் வந்து வியாபாரியிடம் ஏமாற்றி வெல்பவனாய் சென்ற உன்னால் இங்கே எத்தனை தள்ளுவண்டிகள் தடம் புரளுகின்றன.....!!! போதும் !!! போதும் !!! இனியாவது திருந்தியும் திருத்தியும் கொள்ளுங்கள்...!!!


